search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்எஸ்எஸ் பிரமுகர்"

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் ஒரு பாட்டிலில் பெட்ரோல், மண்எண்ணெய் நிரப்பி, திரியை பொருத்தி பற்றவைத்து ராஜன் வீட்டில் வீசினர்.
    • ராஜன் அளித்த புகாரின்பேரில் 7 பேரை அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதி சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை, பரமக்குடி நன்னுசாமி தெருவை சேர்ந்தவர் ராஜன் (வயது 50).

    சேலம் மாநகர ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளராக உள்ளார். மேலும் சிற்பக்கலைக்கூடம் வைத்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் ஒரு பாட்டிலில் பெட்ரோல், மண்எண்ணெய் நிரப்பி, திரியை பொருத்தி பற்றவைத்து ராஜன் வீட்டில் வீசினர்.

    இதுதொடர்பாக ராஜன் அளித்த புகாரின்பேரில் 7 பேரை அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதி சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    இதில் கிச்சிப்பாளையம், பச்சப்பட்டியை சேர்ந்த, எஸ்.டி.பி.ஐ. கட்சி சேலம் மாநகர மாவட்ட தலைவர் சையத் அலி (42), பொன்னம்மாபேட்டை, திப்பு நகரை சேர்ந்த, அதே கட்சியின், 34-வது வார்டு தலைவர் காதர் ஹூசைன் (33) ஆகியோர் பாட்டில் குண்டை வீசியது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து போலீசார், சையத் அலி, காதர் ஹூசைன் ஆகியோர் மீது தீ வைத்தல், புகழுக்கு களங்கம் விளைவித்தல், மத நல்லிணக்கத்துக்கு எதிராக செயல்படுதல் பிரிவுகளில் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த நிலையில் சையத் அலி மற்றும் காதர் ஹூசைன் ஆகியோர் பொது ஒழுங்கு மற்றும் மாநில பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட காரணத்திற்காகவும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்க முயன்றதாலும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கும்படி அம்மாபேட்டை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கணேசன், உதவி கமிஷனர் சரவணகுமார் ஆகியோர் துணை கமிஷனர் மாடசாமி மூலம் கமிஷனர் நஜ்முல் ஹோதாவுக்கு பரிந்துரை செய்தனர்.

    இப்பரிந்துரையை ஏற்ற கமிஷனர், 2 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் வைக்க உத்தரவிட்டார். அதற்கான ஆணையை சேலம் மத்திய சிறையில் உள்ள சையத் அலி, காதர் ஹூசைன் ஆகியோரிடம் போலீசார் வழங்கினர்.

    ×